தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை + "||" + Afghanistan wicketkeeper Shahzad gets 12-month doping ban

ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை

ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பருக்கு கிரிக்கெட் விளையாட  ஓராண்டு தடை
ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துபாய், 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷாசத். போட்டி இல்லாத காலத்தில் இவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரி சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன் முடிவில் ‘கிளன்புடெரோல்’ என்ற ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியது அம்பலமானது. 

இதையடுத்து அவருக்கு ஓராண்டு விளையாட தடைவிதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. உடல்எடையை குறைக்கும் முயற்சியில் கவனக்குறைவாக இந்த மருந்தை அவர் உபயோகித்தது தெரியவந்ததால் ஐ.சி.சி. அவருக்கு கொஞ்சம் கருணை காட்டியுள்ளது. அதாவது அவரிடம் சிறுநீர் மாதிரி கடந்த ஜனவரி 17–ந்தேதி எடுக்கப்பட்டது. அதனால் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 17–ந்தேதி மீண்டும் கிரிக்கெட் களம் திரும்ப முடியும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. 29 வயதான ஷாசத் இதுவரை 58 ஒரு நாள் போட்டிகளிலும், 58 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.