கிரிக்கெட்

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இலங்கை அணி நாளை காலை 11.35 மணிக்கு டாக்கா சென்றடைகிறது + "||" + Sri Lankan cricket team arrives tomorrow

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இலங்கை அணி நாளை காலை 11.35 மணிக்கு டாக்கா சென்றடைகிறது

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்:  இலங்கை அணி நாளை காலை 11.35 மணிக்கு டாக்கா சென்றடைகிறது
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணி நாளை காலை 11.35 மணிக்கு டாக்கா சென்றடைகிறது.#cricket #SriLanka
டாக்கா,

வங்காளதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் விளையாடுகின்றன. வருகிற ஜனவரி 15ந்தேதி தொடங்க உள்ள இந்த போட்டிகளில் முதலில் வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் விளையாட உள்ளன.

இந்த போட்டி தொடருக்கு பின்னர் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வங்காளதேசம் விளையாட உள்ளது.  2 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 31ந்தேதி தொடங்கி பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெறும்.  2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 8ந்தேதி தொடங்கி 12ந்தேதி வரை நடைபெறும்.

முதல் டி20 போட்டியானது பிப்ரவரி 15ந்தேதி தொடங்க உள்ளது.  2வது டி20 போட்டி 18ந்தேதி நடைபெறும்.

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஏஞ்செலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி வங்காளதேசத்தின் ஹஸ்ரத் ஷாஜாலால் சர்வதேச விமான நிலையத்திற்கு நாளை காலை 11.35 மணியளவில் சென்றடைகிறது.
#cricket | #SriLanka