மாநில செய்திகள்

போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும்: முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு + "||" + Salem will be created as a traffic congestion free: Chief Minister Palanisamy talks

போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும்: முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு

போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும்:  முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும் என புதிய மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். #EPS #TamilNews

சேலம்,

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி சேலம்-பெங்களூரு சாலையில் புதிய மேம்பால பணிக்கான அடிக்கல்லை இன்று நாட்டினார்.  ரூ.21.97 கோடிமதிப்பில் இந்த புதிய மேம்பால பணி இரும்பாலை சந்திப்பில் நடைபெற உள்ளது.

புதிய மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதல் அமைச்சர் பழனிசாமி பேசினர்ர்.  அவர் பேசும்பொழுது, சேலம் மாநகருக்கு தேவையான பாலங்கள் அமைக்க உத்தரவிட்டவர் ஜெயலலிதா.  இதுவரை யாரும் கவனிக்காத சேலம் ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் பாலங்கள் கிடைத்தன.

செவ்வாய்பேட்டை, முல்லுவாடிகேட் அருகே 2 பாலங்கள், மணல் மேடு போன்ற பகுதிகளில் பாலங்களை அமைத்தோம்.  புறவழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம்.  மத்திய மந்திரி நிதீன் கட்காரி உடனே அனுமதி வழங்கினார்.

சேலத்தில் விமான நிலைய தரத்தில் பேருந்து நிலையம் அமைய உள்ளது.  சேலத்தில் ஏர்போர்ட் போன்று பஸ் போர்ட் அமைக்கப்படும் என பேசியுள்ளார்.

#Trafficjam | #ChiefMinisterPalanisamy