தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் சாலை விபத்தில் பலி + "||" + Five wrestlers among six killed in Maharashtra road accident

மகாராஷ்டிராவில் 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் சாலை விபத்தில் பலி

மகாராஷ்டிராவில் 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் சாலை விபத்தில் பலி
மகாராஷ்டிராவில் உள்ளூர் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிய 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் சாலை விபத்தில் இன்று பலியாகினர். #accident #Mumbai

மும்பை,

மேற்கு மகாராஷ்டிராவில் சங்கிலி மாவட்டத்தில் காடேகாவன்-சங்கிலி சாலையில் வந்து கொண்டிருந்த ஆடம்பர ரக கார் மீது எதிர் திசையில் இருந்து வந்த டிராக்டர் ஒன்று மோதியது.  இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.

அவர்கள் ஆந்த் கிராமத்தில் நடந்த மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு சங்கிலி மாவட்டத்தில் உள்ள குண்டல் நகருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.  இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் சங்கிலியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிராக்டர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

#wrestlers | #roadaccident | #Mumbai