தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 40 பள்ளி குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து, 2 பேர் சடலமாக மீட்பு + "||" + Boat With 40 School Children Capsizes In Maharashtra: Updates

மராட்டியத்தில் 40 பள்ளி குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து, 2 பேர் சடலமாக மீட்பு

மராட்டியத்தில் 40 பள்ளி குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து, 2 பேர் சடலமாக மீட்பு
மராட்டியத்தில் 40 பள்ளி குழந்தைகளுடன் கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Maharashtra | #BoatCapsize
மும்பை, 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து 135 கி.மீட்டர் தொலைவில் உள்ள பால்கர் மாவட்டம் தஹானு பகுதியில் பர்னகா என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் இருந்து பள்ளி மாணவர்கள் 40 பேருடன் கடலுக்குள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த மாணவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல்படையின் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியின்போது 2 மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டதாகவும், 32 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மீதமுள்ள மாணவர்களை மீட்கும் பணியில் மீட்புகுழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  தஹானு கடற்கரையில் இருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் காலை 11.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படகு கவிழ்ந்தது பற்றி தகவல் கிடைத்ததும் உயர் அதிகாரிகள் தஹானு கடற்கரைக்கு விரைந்தனர். முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  #Maharashtra | #BoatCapsize