தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது: கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா + "||" + Karnataka Chief Minister Siddaramaiah said that Cauvery water can not be opened for Tamil Nadu

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது: கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது: கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா
தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது என்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். #CauveryIssue | #EPS | #Siddaramaiah
பெங்களுரூ,

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கோரி, கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையாவிற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில்,  தமிழகத்தில் பயிர் பாசனத்திற்காக கர்நாடக அரசு குறைந்த பட்சம் 15 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். டெல்டா விவசாயிகளின் நலனுக்காக கர்நாடகா உடனடியாக 7 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும். மேட்டூர் அணையில் தற்போது இருக்கும் 21 டிஎம்சி தண்ணீர் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் போதுமானதாக இல்லை” என்று தனது கடிதத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

இந்த கடிதத்துக்கு பதில் எழுதியுள்ள சித்தராமையா, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கூறி முதல் அமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். மேலும், அடுத்த மாதம் காவிரி வழக்கில் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்” என சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். .  #CauveryIssue | #EPS | #Siddaramaiah