தேசிய செய்திகள்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது + "||" + Man issues death threat to Nitish Kumar, video goes viral on social media

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு  கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #NitishKumar #Bihar
பாட்னா,

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் குறித்து  கொலை மிரட்டல்  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்  குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாட்னாவில் உள்ள பாத்யாஹாவை சேர்ந்த பிரமோத் குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளத்தில் முதல்-மந்திரி குறித்து வீடியோ வெளியிட்டது குறித்து அவரிடம்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.