மாநில செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு: கர்நாடக முதல்–மந்திரிக்கு, ஜி.கே.வாசன் கண்டனம் + "||" + GK Vasan denounced Karnataka Chief Minister

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு: கர்நாடக முதல்–மந்திரிக்கு, ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு: கர்நாடக முதல்–மந்திரிக்கு, ஜி.கே.வாசன் கண்டனம்
பாசன வசதிக்காக காவிரியில் இருந்து 7 டி.எம்.சி. அளவு தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக முதல்–அமைச்சர் விடுத்த வேண்டுகோளை, கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா நிராகரித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பாசன வசதிக்காக காவிரியில் இருந்து 7 டி.எம்.சி. அளவு தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக முதல்–அமைச்சர் விடுத்த வேண்டுகோளை, கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா நிராகரித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நியாயமாக காவிரி மேலாண்மை வாரிய நிலைப்பாட்டின்படி காவிரியில் இருந்து நமக்கு 81 டி.எம்.சி. அளவு தண்ணீர் பாக்கி இருக்கிறது. இதில் வெறும் 7 டி.எம்.சி. தண்ணீர் கூட கொடுக்க முடியாத கர்நாடகாவின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ஏற்கனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தாமதமாகத்தான் திறந்துவிடப்பட்டது. தற்போது டெல்டா பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரை நம்பியே உள்ளது. இந்த நிலையில் தண்ணீர் திறக்காமல் போனால் அந்த பயிர்கள் அனைத்தும் கருகி நாசமாகிவிடும். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காத நிலைப்பாட்டில் மட்டும் மத்திய பா.ஜ.க.வும், கர்நாடக மாநில அரசும் மறைமுக கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்து அம்மாநில அரசுக்கு மத்திய பா.ஜ.க. உதவி புரிந்து வருகிறது.

எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்யவேண்டும். அதில் எடுக்கப்படும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை வைத்து மத்திய அரசை தாமதிக்காமல் வலியுறுத்தி நல்ல தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். தை திருநாள் விவசாயிகளுக்கான விடியலாக அமையவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.