மாநில செய்திகள்

குடும்பத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்பு + "||" + Pongal Festival Commissioner who celebrated family members

குடும்பத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்பு

குடும்பத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்பு
போலீஸ் உதவி கமி‌ஷனர்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து நேற்று பொங்கல் விழாவை கொண்டாடினர்.
சென்னை, 

சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் குடியிருப்புகளிலும் போலீஸ் உதவி கமி‌ஷனர்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து நேற்று பொங்கல் விழாவை கொண்டாடினர்.

கொண்டித்தோப்பு, புரசைவாக்கம் போலீஸ் குடியிருப்பில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சிகளை கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.

போலீஸ் குடும்பத்தினருக்கு இடையே கோலப் போட்டி, இசை நாற்காலி போட்டி, சிலம்பும் சுற்றும் போட்டி, உரி அடித்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். போலீசார் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தையும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் எச்.எம்.ஜெயராம், இணை கமி‌ஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆர்.சுதாகர், பூக்கடை துணை கமி‌ஷனர் எஸ்.செல்வகுமார் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.