மாநில செய்திகள்

இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் வாழ்த்து + "||" + Greeting the Governor

இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் வாழ்த்து

இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் வாழ்த்து
பொங்கல், சங்கராந்தி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை, 

கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

பொங்கல், சங்கராந்தி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நமது குடும்பங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்கும் அறுவடை திருவிழா தான் பொங்கல். இந்த நாளில் நாம், நமது பிரார்த்தனைகளையும், நன்றிகளையும் இயற்கை தந்த ஆசிகளுக்காகவும், தை மாத தொடக்கம் நமக்கு தந்த ஏராளமான அறுவடைகளுக்காகவும் நன்றி செலுத்துகிறோம்.

இந்த பொங்கல் திருநாளை கொண்டாடுகிற நேரத்தில் இயற்கையை கொண்டாடும் நமது உயர்ந்த பாரம்பரியத்தையும், நமது பண்பாட்டையும் மிகவும் பெருமையும் களிப்போடும் தமிழக கலாசாரத்தின் உயர்வையும் தொடர்ந்து கடைபிடிக்க உறுதி எடுத்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.