மாநில செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் + "||" + Pallanasamy starts the race for Jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 16-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.
அலங்காநல்லூர்,

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறுவது வழக்கம்.

முதல் ஜல்லிக்கட்டாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளான இன்று நடக்கிறது.

நாளைய தினம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கிறது.

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதற்காக வாடிவாசல், பார்வையாளர் மேடை, இரண்டு அடுக்கு தடுப்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தென்னைநார் கழிவுகள் பரப்பப்பட்டுள்ளன.

இந்த ஜல்லிக்கட்டில் 1188 வீரர்களும், 1000 காளைகளும் பங்கேற்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளனர்.

இதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) கார் மூலம் மதுரை வந்து, அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

16-ந் தேதி அலங்காநல்லூர் சென்று, காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.