மாநில செய்திகள்

சாலையோர பெட்டிக்கடை உரிமத்துக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு + "||" + The Order Directive to comply with the base license

சாலையோர பெட்டிக்கடை உரிமத்துக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

சாலையோர பெட்டிக்கடை உரிமத்துக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
முறைகேட்டை தடுக்க சாலையோர பெட்டிக்கடை உரிமத்துக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

முறைகேட்டை தடுக்க சாலையோர பெட்டிக்கடை உரிமத்துக்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட 5 பேர் சாலையோர பெட்டிக்கடை வைக்க அனுமதி கேட்டு சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அந்த விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து அந்த மனுக்கள் மீது விரைந்து முடிவு எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் 5 பேரும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாலையோர பெட்டிக் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் அந்த உரிமத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விட்டு மீண்டும் விண்ணப்பம் கொடுப்பதாகவும், சென்னையில் உள்ள 629 கடைகளில் 257 கடைகளுக்கு மட்டுமே நீதிமன்ற உத்தரவு உள்ளதாகவும், புதிய மனுக்களை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி வக்கீல் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மனுதாரர்கள் ஒரு மாதத்திற்குள் புதிதாக ஒரு மனுவை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ள குழுவிடம் கொடுக்க வேண்டும். மனுக்களை அந்தக்குழு ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சாலையோர பெட்டிக்கடை வைக்க ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் முறைகேடாக மீண்டும் உரிமம் பெற விண்ணப்பம் அளிப்பதை தடுக்க விண்ணப்பத்துடன் ஆதார் அட்டையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே இருந்து வரும் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.