தேசிய செய்திகள்

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மலையை குடைந்து சாலை அமைத்த மனிதர் + "||" + Odisha man carves out 8-km road, connects his village to city

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மலையை குடைந்து சாலை அமைத்த மனிதர்

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மலையை குடைந்து சாலை அமைத்த மனிதர்
ஒடிசாவில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக மலையை குடைந்து 8 கி.மீ தூரம் வரை சாலையை உருவாக்கி உள்ளார். #Odisha #Tamilnews
பாட்னா,

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் நாயக் இவர் கும்சகி என்னும் மலைகிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவமனைக்கு செல்வது என்றாலும், அங்கன்வாடி, பள்ளிக்கு சென்றாலும் மலையை கடந்து தான் செல்ல வேண்டும். சாலை வசதி இல்லாததால் அந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

இதனை அறிந்த ஜலந்தர் நாயக் மலையை குடைந்து சாலை அமைக்க முடிவு செய்தார். தற்போது 8 கி.மீ தூரம் வரை கிராமத்திற்கும் நகரத்திற்கும் மலையை குடைந்து சாலையை உருவாக்கி உள்ளார். 

இது குறித்து ஜலந்தர் நாயக்  கூறுகையில்,

எங்கள் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இல்லை. மருத்துவமனை இல்லை. பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் கூட கடினமான மலைப்பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். அதனால் மலையை குடைந்து சாலையை அமைக்க முடிவு செய்தேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மாவட்ட வளர்ச்சித்துறை அதிகாரி கூறுகையில்,

ஜலந்தர் நாயக் கிராமத்தினர் வசிக்கும் இடம் சரியான பாதுகாப்பு இடம் கிடையாது. அதனால் நாங்கள் அவர்களை நகரத்தில் வசிக்க வருமாறு அழைத்தோம் ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர்.  எங்கள் ஆதரவு அவர்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.