மாநில செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: சிறந்த காளையர் மற்றும் காளைக்கு கார் பரிசு + "||" + Alanganallur Jallikattu Contest: car gift for Best bull and bull fighter

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: சிறந்த காளையர் மற்றும் காளைக்கு கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:  சிறந்த காளையர் மற்றும் காளைக்கு கார் பரிசு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையர் மற்றும் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.#Jallikattu

அலங்காநல்லூர்,

ஜல்லிக்கட்டு போட்டி மீதானகோர்ட்டு தடை நீங்கிய நிலையில் இந்த வருடம் கோலாகலமுடன் போட்டி நடத்தப்படுகிறது.

முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  அதன்பின்னர் விழா மேடையில் அமர்ந்து போட்டியை ரசித்து வருகின்றனர்.

அலங்காநல்லூர் வாடிவாசலில் இருந்து முதல் காளையாக வந்த முனியாண்டி கோயில் காளைக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.  தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையருக்கு முதல் அமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.  இதேபோன்று அடங்காத காளைக்கும் துணை முதல் அமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.

#Jallikattu #Alanganallur