மாநில செய்திகள்

அலங்காநல்லூரில் கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி + "||" + An additional hour allowed for Alanganallur Jallikattu contest

அலங்காநல்லூரில் கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி

அலங்காநல்லூரில் கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி
அலங்காநல்லூரில் காளையர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அறிவித்தனர்.#Jallikattu #Alanganallur

அலங்காநல்லூர்,

முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையருக்கு முதல் அமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.  இதேபோன்று அடங்காத காளைக்கும் துணை முதல் அமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் போட்டியை கூடுதலாக ஒரு மணிநேரம் நடத்த வேண்டும் என காளையர்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அறிவித்தனர்.

#Jallikattu | #Alanganallur