மாநில செய்திகள்

அலங்காநல்லூரில் சிறந்த காளை, காளையருக்கு முதலவர்- துணை முதலவர் கார் பரிசு! + "||" + Best bull and player in Alanganallur Chief Minister for the Deputy Chief Minister

அலங்காநல்லூரில் சிறந்த காளை, காளையருக்கு முதலவர்- துணை முதலவர் கார் பரிசு!

அலங்காநல்லூரில் சிறந்த காளை, காளையருக்கு முதலவர்- துணை முதலவர் கார் பரிசு!
அலங்காநால்லூரில் சிறந்த காளையருக்கு முதலவர் சார்பிலும், அடங்கா காளைக்கு துணைமுதல்வர் சார்பிலும் கார் பரிசு வழங்கப்படுகிறது. #Jallikattu
மதுரை

பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து முடிந்தது.இதையடுத்து உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. அலங்காநல்லூரில் ஒரு மணி நேரம் கூடுதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் காளையர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர், துணை முதல்வர் அறிவித்தனர்.

ஜல்லிகட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை  முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் கொடி அசைத்து  துவக்கி வைத்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் சீறி வரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையை பின்பற்றி விளையாடுவோம் என்றும் உறுதி மொழிகிறோம் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலாவதாக வந்த முனியாண்டி கோயில் காளைக்கு சிவப்பு கம்பள பரிசு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் திறந்துவிடப்பட்டன, சீறிப்பய்ந்து வந்த காளைகளை  மாடுபிடி வீரர்கள் லாவகமாக அடக்கினர். ஒரு சில காளைகளை வீரர்கள் பிடிக்க முடியாமல் திண்டாடினர்

அலங்காநால்லூரில் சிறந்த காளையருக்கு  முதலவர் சார்பிலும், அடங்கா காளைக்கு துணைமுதல்வர் சார்பிலும்  கார் பரிசு வழங்கப்படுகிறது.

வேறு எந்த ஜல்லிக்கட்டிலும் இல்லாத அளவிற்கு, இந்த ஜல்லிக்கட்டில் காளைகளுக்கும், காளையர்களுக்கு பரிசு வாரி வழங்கப்பட்டுள்ளது. கம்பீரமான காளைகள் வீரர்கள சிதறடிக்கும் வகையில் சீறிப்பாய்ந்து வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையராக தேர்வு செய்யப்படும் வீரருக்கு எடப்பாடி பழனிசாமி சார்பிலும், சிறந்த காளையாக தேர்வாகும் மாட்டுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சார்பிலும் புதிய கார் வழங்கப்படவுள்ளது.

 #Jallikattu #Alanganallur #EdappadiPalaniswami #OPS


அதிகம் வாசிக்கப்பட்டவை