மாநில செய்திகள்

பணம் கொடுத்து தேர்தலில் ஜெயித்த தினகரனை அ.தி.மு.க.வில் சேர்த்தால் எதிர்ப்பேன்- ஆடிட்டர் குருமூர்த்தி + "||" + dhinakaran giving money to win elections join AIADMK Oppose Auditor Gurmurthy

பணம் கொடுத்து தேர்தலில் ஜெயித்த தினகரனை அ.தி.மு.க.வில் சேர்த்தால் எதிர்ப்பேன்- ஆடிட்டர் குருமூர்த்தி

பணம் கொடுத்து தேர்தலில் ஜெயித்த  தினகரனை அ.தி.மு.க.வில் சேர்த்தால் எதிர்ப்பேன்- ஆடிட்டர் குருமூர்த்தி
பணம் கொடுத்து தேர்தலில் ஜெயித்தார் தினகரன் அவரை அ.தி.மு.க.வில் சேர்த்தால் எதிர்ப்பேன் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறி உள்ளார்.#AuditorGurmurthy
சென்னை, 

சென்னையில் நடந்த ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் குருமூர்த்தி பேசியதாவது:

தமிழகத்தில் தி.மு.க.வை எதிர்க்கக் கூடிய சக்தி பெற்ற ஒரே கட்சியாக இருப்பது அ.தி.மு.க.தான். ஆனால் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக,  இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகும் அந்தக் கட்சியால் வலுப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எப்படியாவது இந்த அரசை வீழ்த்தி விட்டு தேர்தல் வந்தால் நாம் வென்று விடுவோம் என்ற கனவில் கடந்த 6 மாதங் களாக மு.க.ஸ்டாலின் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.

ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு இது குறித்து எதுவுமே அவர் பேசவில்லை. இப்போது தேவை என்றால் இந்த அரசு மீது  நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்கிறார்.

ஏனெனில், இந்த அரசாங்கம் வீழ்ந்து மீண்டும் தேர்தல் வந்தால், நாம் வெற்றி பெறுவோமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி தி.மு.க.வுக்கு எழுந்துள்ளது.
எதிர்ப்பே இல்லாத நிலை உருவாகியிருப்பதால் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்கப் போகிறது. இதை வீழ்த்துவதற்கு தி.மு.க. தயாராக இல்லை. எனவே அ.தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அ.தி.மு.க. பலவீன மடைந்து வருவதைத் தடுக்க, கட்சியில் தினகரனைக் கொண்டுவர முயற்சித்தால், அதை எதிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். 
அது மட்டுமின்றி, அவ்வாறு தினகரனை இணைத்துக் கொள்வது அந்தக் கட்சிக்கும் நல்லதல்ல. அவரை இணைப்பதால், அ.தி.மு.க. மேலும் உடையுமே தவிர, ஒருமித்த அ.தி.மு.க. உருவாகாது. இதை அ.தி.மு.க.வினர் உணர வேண்டும்.

தினகரனின் வெற்றியைப் பொருத்தவரை அவர் தேர்தலையே விலை கொடுத்து வாங்கி விட்டார். முந்தைய இடைத்தேர்தலின்போது கொடுத்த பணத்துக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நன்றியோடு தினகரனை ஜெயிக்க வைத்திருக்கின்றனர். பணம் கொடுத்துத்தான் ஓட்டு வாங்கினேன்  என்பதை தினகரனே மறுக்க முடியாது.

இன்றைய சூழலில் தமிழகத்தில் திராவிட அரசி யல் உளுத்துப் போய் விட்டது என்பதுதான் உண்மை. இரு கட்சிகளும் தமிழகத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. தமிழகத்தின் வளர்ச்சி ஸ்தம்பித்து போய் உள்ளது. அமைச்சர்கள் அனைவரும் வசூலில் மட்டுமே குறியாக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

#AuditorGurmurthy    #AIADMK    #TTVdhinakaran