மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு: முதல் அமைச்சர் பேச்சு + "||" + Jallikattu is a Traditional and Heroic Sports: CM Palanisamy

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு: முதல் அமைச்சர் பேச்சு

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு:  முதல் அமைச்சர் பேச்சு
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு என அலங்காநல்லூரில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.#Jallikattu #EPS

மதுரை,

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது.  முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அலங்காநல்லூர் வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  அதன்பின் போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையருக்கு முதல் அமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.  இதேபோன்று சிறந்த காளைக்கு துணை முதல் அமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.

அலங்காநல்லூரில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசும்பொழுது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது.

வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம்.  காளைகளை துன்புறுத்திடாமல் தங்களது குழந்தைகளை போல் உரிமையாளர்கள் வளர்த்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

அலங்காநல்லூரில் காளையர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அறிவித்தனர்.

#Jallikattu | #EPS