உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர்பூட்டோவை கொலைக்கு தலிபான்களே பொறுப்பு + "||" + Pakistan Taliban claims it killed Benazir Bhutto

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர்பூட்டோவை கொலைக்கு தலிபான்களே பொறுப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர்பூட்டோவை கொலைக்கு தலிபான்களே பொறுப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர்பூட்டோவை தங்கள் அமைப்பினர்தான் கொன்றதாக பாகிஸ்தான் தலிபான் தெரிவித்துள்ளது.#BenazirBhutto #PakistaniTaliban
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்தவர் பெனாசிர் பூட்டோ. முன்னாள் பிரதமரான இவர், 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி ராவல் -பிண்டியில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசார பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது தற்கொலை படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்புதான் காரணம் என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், அவர்கள் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுக்குப் பிறகு இப்போது அந்த அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்காவுடன் இணைந்து முஜாகிதீன்களை அழிக்க பெனசிர் திட்டமிட்டதால் அவரைக் கொலை செய்ததாக அந்த அமைப்பினர் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுமன்சூர் ஆசிம் முப்தி நூர் வாலி எழுதிய புத்தகம் கடந்த ஆண்டு நவம்பர் 30ந்தேதி ஆப்கானிஸ்தானில் வெளியிடபட்டது
அந்த புத்தகத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தலிபான்களின் தற்கொலை படை தீவிரவாதிகள் பிலால் என்கிற சயீத் மற்றும் இக்ரா முல்லா ஆகியோர் தாக்கு தல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்காவுடன் இணைந்து முஜாகிதீன்களுக்கு எதிரான நடவடிக்கைக்கும், தீவிரவாத குழுக்களை தடை செய்யவும் திட்டமிட்டிருந்தார். அதனால் அவர் கொலை செய்யபட்டதாக தரிவிக்கப்பட்டு உள்ளது. 

#BenazirBhutto    #PakistaniTaliban    #Pakista    #Taliban