தேசிய செய்திகள்

ராஜஸ்தான், குஜராத்- மத்திய அரசு மீது பிரவீண் தொகாடியா குற்றச்சாட்டு + "||" + vhp leader praveen togadia attacks on rajasthan government and centralgovernment

ராஜஸ்தான், குஜராத்- மத்திய அரசு மீது பிரவீண் தொகாடியா குற்றச்சாட்டு

ராஜஸ்தான், குஜராத்-   மத்திய  அரசு மீது பிரவீண்  தொகாடியா குற்றச்சாட்டு
ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய அரசு மீது விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா குற்றஞ்சாட்டி உள்ளார்.#PravinTogadia
அகமதாபாத்,

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவீண்  தொகாடியா கடந்த 2015ம் ஆண்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது.  இதற்காக அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ராஜஸ்தான்  போலீசார் நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்றனர்.  ஆனால் தொகாடியா வீட்டில் இல்லை.  இதனால் போலீசார் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் அந்த அமைப்பின் தொண்டர்கள் சோலா காவல் நிலையத்தினை முற்றுகையிட்டனர்.  அவர்கள் போலீசார் தொகாடியாவை கைது செய்துள்ளனர் என கோஷங்கள் எழுப்பியதுடன் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.  போலீசார் உடனடியாக அவரை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதனால் காணாமல் போன தொகாடியாவை தேடுவதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொகாடியாவை போலீசார் கைது செய்யவில்லை என ராஜஸ்தான் காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.  நேற்று காலை 11 மணியளவில் ஆட்டோ ஒன்றில் கிளம்பி சென்றபின் அவரை காணவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்திரமணி மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறும்பொழுது, கிழக்கு அகமதாபாத் நகரில் கோடார்பூர் பகுதி அருகே பூங்கா ஒன்றில் தொகாடியா மயக்கமடைந்த நிலையில் கிடைந்துள்ளார்.  அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.  குறைந்த சர்க்கரை அளவால் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் கீழே விழுந்துள்ளார்.  அவரது உடல் நிலை முழுவதும் சீரான பின் மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரவீண் தொக்காடியா கூறியதாவது:-

ராஜஸ்தான், குஜராத் போலீசார் என்னை மிரட்டினர், போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்கவே எனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தேன். மத்திய அரசு என் குரலை ஒடுக்க பார்க்கிறது, பொய்யான வழக்கில் எனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை நியாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர கூறினார்.