தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீரவில்லை -அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் + "||" + Supreme Court judicial crisis not resolved yet, says Attorney General KK Venugopal

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீரவில்லை -அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்

சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி, நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீரவில்லை -அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீர வேண்டும் என்றே விரும்புவதாகவும் 3 நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியுள்ளார்.#KKVenugopal
புதுடெல்லி

இந்திய வரலாற்றில் முதன் முதலாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக அங்கு பணிபுரியும் மூத்த நீதிபதிகளான ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று போர்க்கொடி உயர்த்தினார்கள். அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாகத்தில் குளறுபடி இருப்பதாகவும், வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்கள். அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு தாங்கள் கூட்டாக எழுதிய கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், 4 மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு  தலைமை நீதிபதி, நீதிபதிகள் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய பார்கவுன்சில் நேற்று அறிவித்தது. இந்நிலையில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்று கூறியுள்ளார்.

நீதிபதிகள் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தலைமை நீதிபதி மீது நீதிபதிகள் 4 பேர் குற்றச்சாட்டு வைத்தது மிக முக்கியமா பிரச்னை. இந்த பிரச்னை விரைவில் தீர வேண்டும் என்றே நான் நம்புகிறேன், தற்போதைய சூழலில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. விரைவில் முழுவதும் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.

தலைமை நீதிபதியை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த வேணுகோபால், தான் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு செயல்பாடுகள் குறித்து குற்றச்சாட்டு முன் வைத்த நீதிபதிகள் 4 பேரும் தங்களது பணிக்குத் திரும்பியுள்ளதாவும் வேணுகோபால் தெரிவித்தார்.

ஜனவரி 12ம் தேதி நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி இருந்தார் வேணுகோபால்.

 #sccrisis, #attorneygeneral  #KKVenugopal