மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால் 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது + "||" + Sri Lanka Navy 16 Rameswaram fishermen arrested

இலங்கை கடற்படையால் 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால்  16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
மீன் பிடிக்க சென்ற 16 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யபட்டனர். #SriLankaNavy #Rameswaramfishermen #TNfishermen
ராமேசுவரம்,

ராமேசுவரம் மண்டபம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை இந் திய கடல் எல்லையை ஒட்டியுள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந் தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசு வரம் மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். மேலும் படகுகளில் ஏறிய அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்ப முற்பட்டனர்.அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை 4 விசைப்படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

அவர்கள் இன்று  காலை  காங்கேசன் துறைமுகத் துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ராமேசு வரம், மண்டபம் பகுதி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.