உலக செய்திகள்

13 குழந்தைகளை வீட்டில் அடைத்து, சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய அமெரிக்க பெற்றோர் கைது + "||" + Torture probe launched after 13 siblings held captive in US home

13 குழந்தைகளை வீட்டில் அடைத்து, சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய அமெரிக்க பெற்றோர் கைது

13 குழந்தைகளை வீட்டில் அடைத்து, சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய அமெரிக்க பெற்றோர் கைது
அமெரிக்காவில் 13 குழந்தைகளை உணவு தராமல் சங்கிலியால் கட்டி போட்டு கொடுமை செய்த பெற்றோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.#US #California
பெர்ரீஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெர்ரீஸ் நகரில் வசித்து வருபவர்கள் டேவிட் ஆலென் டர்பின் (வயது 57) மற்றும் லூயிஸ் அன்னா டர்பின் (வயது 49).  இவர்களுக்கு 13 குழந்தைகள்.

அனைவரையும் வெளியுலகு தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர் அவர்களது பெற்றோர்.  இந்த நிலையில் அங்கிருந்து தப்பிய அவர்களது 17 வயது மகள் கையில் கிடைத்த செல்போன் உதவியுடன் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.

இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, 10 வயது நிறைந்தவள் போல் அந்த சிறுமி இருந்துள்ளார்.  வீட்டில் 12 குழந்தைகள் இருக்கும் என தேடி போனோம்.

ஆனால் அந்த வீட்டில் 2 முதல் 29 வயது நிறைந்த 13 பேர் இருந்தனர்.  அவர்களில் பலர் படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருளில் இருந்தனர்.  அவர்களை சுற்றி துர்நாற்றம் வீசியது.  பலருக்கு சரியான உணவு தரப்படவில்லை.

அழுக்கடைந்த நிலையில் இருந்த அவர்களை ஏன் இப்படி வைத்திருந்தனர் என்பது பற்றி உடனடியாக அவர்களது பெற்றோரால் சரியான பதில் தர முடியவில்லை.

பசியாக இருக்கிறது என கூறியதனை அடுத்து 13 பேருக்கும் உணவு மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து கொடுமைப்படுத்தியது மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தியது ஆகிய குற்றங்களின் கீழ் பெற்றோர் மீது வழக்கு பதிவானது.  ஜாமீன் பெற 90 லட்சம் அமெரிக்க டாலர் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.  அவர்கள் மீது வங்கி கொள்ளை முயற்சி வழக்கும் முன்பே பதிவாகியுள்ளது.

சமீப காலங்களில் பரபரப்புடன் நடந்த கொடூர கடத்தல்களை இந்த வழக்கு எதிரொலிக்கிறது.

அமெரிக்காவில் ஏரியல் கேஸ்டிரோ என்பவர் 3 இளம்பெண்களை கடத்தி வீட்டில் வைத்து 10 வருடங்களுக்கும் மேல் கற்பழித்து வந்துள்ளார்.  அவர்களில் ஒருவர் தப்பிய நிலையில் 2013ம் ஆண்டு மே மாதத்தில் கேஸ்டிரோ கைது செய்யப்பட்டார்.

இதேபோன்று கலிபோர்னியாவில் பிலிப் கர்ரிடோ என்பவர் 11 வயது ஜெய்சீ டுகார்டை கடத்தி சென்று 18 வருடங்களாக தொடர்ச்சியாக கற்பழித்து வந்துள்ளார்.  டுகார்ட் 2009ம் ஆண்டு ஆகஸ்டில் மீட்கப்பட்டார்.
#US | #California