மாநில செய்திகள்

களை கட்டிய காணும் பொங்கல் மெரினா உள்பட பொழுது போக்கு இடங்களில் குவிந்த மக்கள் கூட்டம் + "||" + Pongal found in the weed Including Marina Entertainment venues Concentration crowd

களை கட்டிய காணும் பொங்கல் மெரினா உள்பட பொழுது போக்கு இடங்களில் குவிந்த மக்கள் கூட்டம்

களை கட்டிய  காணும் பொங்கல் மெரினா உள்பட பொழுது போக்கு இடங்களில்  குவிந்த மக்கள் கூட்டம்
களை கட்டிய காணும் பொங்கல் மெரினா உள்பட பொழுது போக்கு இடங்களில் மக்கள் குவிந்தனர்.#merinabeach #pongal
சென்னை,

தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் ‘களை’ கட் டி உள்ளது. காணும் பொங்கல் தினமான இன்று பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் கூடி பொழுதை கழிப்பார்கள். சென்னை மெரினா கடற் கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் திரண்டனர்.

பிற்பகலில்  கூட்டம் அலை மோதியது. மெரினா கடற்கரை முழுவதுமே மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.   கூட்டம் அதிக மாக காணப்பட்டதால் கடலில் குளிப்பதற்காக இறங்கி யாரேனும் உயிரி ழந்து விடக்கூடாது என் பதை கருத்தில் கொண்டு கடலில் குளிக்க தடை விதிக் கப்பட்டிருந்தது.

அண்ணா சமாதியில் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையில் சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டிருந்தன. இதனை தாண்டி யாரும் உள்ளே சென்று விடக்கூடாது என்ப தால் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரையில் சவுக்கு கட்டைகளுக்கு உள்புறமாக பாதுகாப்பு பணியில் போலீ சார் ஈடுபட்டிருந்தனர்.

கூட்டத்தை கண்காணிப்பதற்காக 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலமாக போலீசார் எச்சரித்துக் கொண்டே இருந்தனர்.

உழைப்பாளர் சிலை அருகில் 2 இடங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு சாமியானா பந்தலில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்தபடியே போலீஸ் அதிகாரிகள் உத்தரவுகளை பிறப் பித்துக் கொண்டே இருந் தனர். கா ணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்க அவர்களின் கை களில் வளையம் ஒன்று பொறுத்தப்பட்டது. அதில் பெற்றோர்கள், போலீசாரின் செல்போன் எண்கள் எழுதப் பட்டன.

கிண்டி சிறுவர் பூங்காவில்  காலையிலேயே பொது மக் கள் கூடினர். அங்கிருந்த பறவைகள் விலங்குகள் ஆகியவற்றை கண்டுகளித்து சிறுவர்களும், பெரியவர் களும் மகிழ்ச்சியில் திளைத் தனர். 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணிக்கே 1 மணி நேரத்துக்கு முன்பாக திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அங்கு 30 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன.அங்கும் கூட்டம் அலை மோதியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை