சினிமா செய்திகள்

எக்காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது -அம்பரீஷ் கடிதம் + "||" + With no reason Cauvery Do not open water for Tamil Nadu actor Ambareesh letter

எக்காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது -அம்பரீஷ் கடிதம்

எக்காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது -அம்பரீஷ் கடிதம்
காவிரியில் இருந்து எந்த காரணத்தை கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என நடிகரும், எம்எல்ஏவுமான அம்பரீஷ் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.#cauveryissue #actorAmbareesh
பெங்களூரு 

காவிரியில் இருந்து எந்த காரணத்தை கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்றும் தமிழக முதல்வரின் கோரிக்கையை பொருட்படுத்த வேண்டாம் என்றும் நடிகரும், எம்எல்ஏவுமான அம்பரீஷ் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்திற் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் குறித்து பதில் அளித்த  கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று கூறினார்.

இந்நிலையில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான அம்பரீஷ் முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில்  அவர் எக்காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது. கடிதத்தில் தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் 

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற இதே நிலைப்பாட்டில் திடமாக இருக்க வேண்டும்.  இதற்கு போதிய ஆதரவை தாமும் கர்நாடக விவசாய சங்கங்களும் அளிக்க தயார்  . என கூறி உள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என முதல்வர் சித்தராமையாவின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.

கர்நாடகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும் என அவர் வினவியுள்ளார். எனவே அணைகளில் இருக்கும் தண்ணீரை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்துமாறு சித்தராமையாவை அம்பரீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.