தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 4 நீதிபதிகளிடம் சமரச பேச்சு + "||" + Supreme Court Chief Justice Deepak Mishra compromise talks to the 4 judges

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 4 நீதிபதிகளிடம் சமரச பேச்சு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 4 நீதிபதிகளிடம் சமரச பேச்சு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 4 நீதிபதிகளிடம் இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.#DipakMisra #SupremeCourtofIndia
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர்,  ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த 12-ந்தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். இந்த  விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கும், 4 நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்குள்ளே பேசி பிரச்சனையை தீர்த்துக்கொண்டனர். நீதிபதிகளின் அதிருப்தியை, யாரும் அரசியலாக்க விரும்பவில்லை உச்சநீதிமன்ற நிர்வாகம் வெளிப்படையாகவே நடைபெறுகிறது என இந்திய பார் கவுன்சில் சங்க தலைவர் மனன் மிஸ்ரா கூறினார்.

இந்நிலையில், புகார் கூறிய 4 நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று அழைத்து பேசினார்.

இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடந்தது.  சுப்ரீம் கோர்ட்டில் தனது அறையில் 4 நீதிபதிகளையும் வரவழைத்து சமரசம் பேசினார்.  நமக்குள்ள பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
#DipakMisra | #SupremeCourtofIndia