தேசிய செய்திகள்

காணாமல் போன பின்னர் நடந்தது என்ன? பிரவீன் தொகாடியா விளக்கம் ‘கொலை செய்ய சதிதிட்டம்’ என குற்றச்சாட்டு + "||" + Togadia alleges plot to kill him says voice being stifled

காணாமல் போன பின்னர் நடந்தது என்ன? பிரவீன் தொகாடியா விளக்கம் ‘கொலை செய்ய சதிதிட்டம்’ என குற்றச்சாட்டு

காணாமல் போன பின்னர் நடந்தது என்ன? பிரவீன் தொகாடியா விளக்கம் ‘கொலை செய்ய சதிதிட்டம்’ என குற்றச்சாட்டு
ராமர் கோவில் விவகாரத்தில் என்னுடைய குரலை ஒடுக்கவும், என்னை கொல்லவும் சதிதிட்டம் நடக்கிறது என பிரவீன் தொகாடியா குற்றம் சாட்டிஉள்ளார். #PravinTogadia #VHP

ஆமதாபாத்,



 விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா மீது ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் போலீசில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் அவரை கைது செய்ய ராஜஸ்தான் மாநில கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து அம்மாநில போலீஸ் குஜராத் போலீசுடன் பிரவீன் தொகாடியாவின் வீட்டிற்கு சென்றபோது அவரை காணவில்லை. நேற்று காலை 10:45 மணியளவில் அலுவலகத்தில் இருந்து ஆட்டோவில் சென்ற அவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கைது செய்துவிட்டது என அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினார், ஆனால் போலீஸ் நாங்கள் கைது செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தது.

பிரவீன் தொகாடியாவை காணவில்லை என்றதும் அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். பிரவின் தொகாடியா செய்தியாளர்களிடம் பேசுகையில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். 

பிரவீன் தொகாடியா பேசுகையில், 10 வருடங்களுக்கு முந்தைய வழக்கில் நான் இலக்காக்கப்பட்டு உள்ளேன், என்னுடைய குரலை ஒடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநில போலீசார் என்னை கைது செய்ய வந்து உள்ளார்கள். அவர்கள் என்னை என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டு உள்ளனர் என எனக்கு செய்தி கிடைத்தது. நேற்று நான் பூஜை செய்துக் கொண்டு இருந்தபோது என்னை என்கவுண்டர் செய்ய குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸ் அதிகளவு என்னுடைய வீட்டிற்கு வருவதாக செய்தி கிடைத்தது. அதன்பின்னர் நானும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தொண்டரும் ஆட்டோ ரிச்சாவில் தெல்தேஜ் பகுதிக்கு சென்றோம். 

இவ்விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் உள்துறை மந்திரி கடாரியாவிற்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் குஜராத் மாநிலத்திற்கு போலீஸ் வந்த விவகாரத்தை மறுத்தனர். எனக்கு சந்தேகம் வழுத்தது, எனவே என்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுத்து எனக்கு எதிரான கைது வாரண்டை ரத்து செய்ய உதவ கேட்டுக் கொண்டேன். அவர்கள் இது மிகவும் கடினமான பணி என்றார்கள். எனவே நான் விமானம் மூலம் ஜெய்பூர் சென்று அங்கு கோர்ட்டில் ஆஜராகிவிட திட்டமிட்டேன். ஆட்டோ ரிச்சாவில் விமான நிலையம் சென்ற போது எனக்கு மயக்கம் ஏற்பட்டது உடனடியாக ஆட்டோவை மருத்துவமனைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். அங்கு நான் சுயநினைவின்றி இருந்தேன். நான் எழுந்ததும் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன் என தெரிந்துக் கொண்டேன். நான் சாவுக்கு பயப்படவில்லை, என்கவுண்டருக்கும் பயமில்லை. சட்டத்தையும் மதித்து என்னை நான் காப்பாற்றிக் கொண்டேன்.

இந்துக்களுக்காக நான் குரல் எழுப்பி வருகின்றேன். ராமர் கோவில், பசுவதைக்கு தடை விதித்து சட்டம் ஏற்றுதல், காஷ்மீர் இந்துக்கள் பிரச்சனையை உடனடியாக சரிசெய்தல், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை ஆகிய விவகாரங்களில் என்னுடைய குரலை எழுப்பி வருகின்றேன். ஆனால் என்னுடைய குரலை ஒடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழைய வழக்குகள் மீண்டும் கையில் எடுக்கப்பட்டு உள்ளது, என்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவை நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் என்னை கைது செய்து என்னை அமைதியாக்க வேண்டும் என முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்று பேசினார். 

சரியான நேரத்தில் என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியவர்கள் யார் என்பதையும் தெரிவிப்பேன் என கூறிஉள்ளார் பிரவீன் தொகாடியா.