தேசிய செய்திகள்

டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்வு + "||" + Diesel Prices Rise To Record High, Petrol At Three-Year Peak

டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்வு

டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்வு
டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் சென்னையில் ரூ.65.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice | #india |
புதுடெல்லி,

டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை அதிகரித்து வரும் நிலையில், டீசல், பெட்ரோல் விலை இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ளன. டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு லிட்டர் 61.88 (டெல்லி) ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது, ரூ.71.27 -க்கு ஒரு லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆகஸ்ட் 2014 க்கு பிறகு, பெட்ரோல்  விலை முதல் முறையாக இந்த விலையை எட்டியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இன்று பெட்ரோல் விலை 9 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை லிட்டருக்கு 14 முதல் 16 காசுகள் வரை அதிகரித்துள்ளது. 

தற்போது பெட்ரோல்,   சென்னையில்  ஒரு லிட்டர் 73.89 காசுகளாகவும் கொல்கத்தாவில் ரூ.74-ஆகவும்,  மும்பையில் ரூ. 79.15-க்கும் விற்கப்படுகின்றன.  டீசல் விலை  கொல்கத்தாவில் லிட்டருக்கு  ரூ.64.54 ஆகவும் மும்பையில் ரூ.65.9 ஆகவும் சென்னையில் 65.23 -க்கும் விற்கப்படுகின்றன. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் தினமும் மாற்றியமைத்து வருகிறது.  #PetrolPrice | #india