மாநில செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கிய வீரர் அஜய்க்கு கார் பரிசு + "||" + Alankanallur Jallikattu In the same round 8 cows player  Ajays car gift

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கிய வீரர் அஜய்க்கு கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கிய வீரர்  அஜய்க்கு கார் பரிசு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கிய மாடு பிடி வீரரான அஜய் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு கார்பரிசு வழங்கப்பட்டது. #Alanganallur #Jallikattu
மதுரை

 உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 - மாலை 5 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. காளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதலாக 1 மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 அலங்காநல்லூரில் 571 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை பிடிக்க 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 36 பேர் காயம்; படுகாயமடைந்த 6பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.

ஜல்லிகட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கிய மாடு பிடி வீரரான அஜய் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.