கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் + "||" + India set record 287 to level series

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்து வருகிறது. #indvsSA #freedomseries
செஞ்சூரியன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில், 335 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 307 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்தது. 

டி வில்லியர்ஸ் (80 ரன்கள்) , எல்கர் (61 ரன்கள்) ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 91.3 ஓவர்கள் தாக்கு பிடித்த தென் ஆப்பிரிக்க அணி, 258 ரன்களில் ஆட்டமிழந்தது.  இந்திய அணி தரப்பில்   அதிகபட்சமாக சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம், 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது.  #indvsSA  #freedomseries