மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து; 4 மணிநேரம் போராடி தீயணைப்பு + "||" + Fire accident in Meenakshi Amman temple in Madurai; fire put off after 4 hours

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து; 4 மணிநேரம் போராடி தீயணைப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து; 4 மணிநேரம் போராடி தீயணைப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்பகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. 4 மணிநேரம் போராடி தீயணைக்கப்பட்டது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்த பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன.  இங்கு நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதனை அடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சென்றன.  தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்காக கடுமையாக போராடினர்.

இந்த தீ விபத்து சம்பவத்தில் 35க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்தன.  சம்பவம் நடந்த பகுதியின் மேற்கூரை சேதமடைந்து உள்ளது.  5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.