மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பேட்டி + "||" + Fire accident in Meenakshi Amman temple in Madurai; Preliminary action will be taken: Minister

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பேட்டி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்:  அமைச்சர் பேட்டி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசல் அருகே ஆயிரங்கால் மண்டபம் அமைந்த பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன.  நேற்றிரவு இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அங்கு சென்றன.  தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்காக கடுமையாக போராடினர்.  இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தீ விபத்து நடந்த பகுதியில் மேற்கூரை ஆகியவை சேதமடைந்தன.

5க்கும் கூடுதலான தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கோவில் பற்றிய அச்சம் பக்தர்களுக்கு வேண்டியதில்லை.  இந்த சம்பவம் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லலாம்.  அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறியுள்ளார்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை மந்திரி சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.