மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீயணைக்கப்பட்டது; தரிசனத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி + "||" + Madurai Meenakshi Amman temple fire put off; Devotees let to go for darshan

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீயணைக்கப்பட்டது; தரிசனத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீயணைக்கப்பட்டது; தரிசனத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீயணைக்கப்பட்ட நிலையில் தரிசனத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசல் அருகே ஆயிரங்கால் மண்டபம் அமைந்த பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன.  நேற்றிரவு இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அங்கு சென்றன.  தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்காக கடுமையாக போராடினர்.  இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தீ விபத்து நடந்த பகுதியில் மேற்கூரை ஆகியவை சேதமடைந்தன.  தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

கோவிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கோவில் பற்றிய அச்சம் மக்களுக்கு வேண்டியதில்லை.  இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  கோவிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.  பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வதில் எந்த பாதிப்பும் இருக்காது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்ட கிழக்கு கோபுர வாசல் தவிர மற்ற வாயில்கள் வழியே கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  300க்கும் கூடுதலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.