தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் மாநிலத்தின் முதல் பட்டாம்பூச்சி பூங்கா தொடக்கம் + "||" + Kanpur gets its first butterfly park

உத்தர பிரதேசத்தில் மாநிலத்தின் முதல் பட்டாம்பூச்சி பூங்கா தொடக்கம்

உத்தர பிரதேசத்தில் மாநிலத்தின் முதல் பட்டாம்பூச்சி பூங்கா தொடக்கம்
உத்தரபிரதேசத்தில் மாநிலத்தின் முதல் பட்டாம்பூச்சி பூங்கா கான்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. #ZoologicalPark
கான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரூபாய் 1 கோடி செலவில் பட்டாம்பூச்சி பூங்கா கட்டப்பட்டுள்ளது.  இந்த பூங்காவில் வண்ணத்துபூச்சிகளை கவர 100க்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது.  பூங்காவை சுற்றி 50க்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் நடப்பட்டுள்ளது. 

தற்போது 50-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் உள்ளது.  இன்னும் சரியான கணக்கெடுப்பு நடத்தவில்லை. வரும் மார்ச் மாதத்தில் இந்த பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் என பூங்கா நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.  மாநிலத்திலேயே கான்பூரில் முதல் பட்டாம்பூச்சி பூங்கா என்ற பெருமையை பெற்றுள்ளது.