தேசிய செய்திகள்

தமிழக திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி வரவில்லை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு + "||" + central government's funds did not come up for Tamil projects Deputy Speaker Thambidurai

தமிழக திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி வரவில்லை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு

தமிழக திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி வரவில்லை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு திட்டங்கள் இல்லை மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தமிழகத்துக்கு வரவில்லை என தம்பிதுரை எம்.பி. குற்றம்சாட்டினார். #AIADMK #Thambidurai
புதுடெல்லி, 

அண்ணா நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில்  அவரது சிலைக்கு பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டை எல்லோரும் வரவேற்று இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. தமிழகத்துக்கு வேண்டிய உரிய பங்கு வரவில்லை என்பது எங்களின் கருத்து. 

பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவும் குறையும். அடிக்கடி தேர்தல் என்ற பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். 

தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய பணம் நிறைய இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தமிழகத்துக்கு வரவில்லை. இது தொடர்பாக முன்பு ஜெயலலிதாவே பலமுறை மத்திய அரசிடம் கடிதம் கொடுத்துள்ளார். ஜி.எஸ்.டி. யால் தமிழகத்துக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குரிய இழப்பீடு சரியான முறையில் தரவில்லை என்பது எங்களுடைய கருத்து. 

தமிழகத்தில் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் முன்னோடியாக செயல்படுத்திய திட்டங்களைத்தான் மத்திய அரசு காலதாமதமாக செயல்படுத்தி வருகிறது. மருத்துவ காப்பீட்டு திட்டமும் அப்படித்தான். எங்களுடைய மருத்துவ காப்பீட்டு திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டு தான் இருப்போம். மத்திய அரசு தருகிற உதவியை பெற்றுக் கொள்வோம். அது அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். ஆனாலும் மத்திய பட்ஜெட்டை நான் எதிர்க்கவில்லை. 
இவ்வாறு அவர் கூறினார்.