உலக செய்திகள்

அமெரிக்கா கொரிய தீபகற்ப நாடுகள் இடையே நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுகிறது வடகொரியா குற்றச்சாட்டு + "||" + As Olympics near, Trump looks to boost pressure on North Korea

அமெரிக்கா கொரிய தீபகற்ப நாடுகள் இடையே நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுகிறது வடகொரியா குற்றச்சாட்டு

அமெரிக்கா கொரிய தீபகற்ப நாடுகள் இடையே நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுகிறது வடகொரியா குற்றச்சாட்டு
அமெரிக்கா கொரிய தீபகற்ப நாடுகள் இடையே ஏற்பட்டு வரும் நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் ஈடுபட்டு வருவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அந்நாட்டிற்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவதற்கு வடகொரியா சம்மதம் தெரிவித்தது. அதன் பின் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகளை திடீரென்று ரத்து செய்தது. 

வடகொரியா ஜனாதிபதி குறித்து ஊடகங்களில் வரும் தவறான செய்திகளே இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் தென் கொரியாவுடன் இணைந்து கொரிய தீபகற்பம் அருகே போர் ஒத்திகையில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும், அதுமட்டுமின்றி வட கொரியாவைச் சீண்டும் வகையில் அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பலை எல்லைக்கு மிகவும் நெருக்கத்தில் கொண்டு வந்து அமெரிக்கா நிறுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த உலகத்தையே அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது.இதனால் உடனடியாக இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட்டு அமெரிக்காவின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.