தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்: வக்பு வாரிய தலைவர் பேச்சு + "||" + Muslims opposing Ram temple must go to Pak: UP Shia Waqf board chief

ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்: வக்பு வாரிய தலைவர் பேச்சு

ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்:  வக்பு வாரிய தலைவர் பேச்சு
அயோத்தியாவில் ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு செல்லுங்கள் என உத்தர பிரதேச ஷியா வக்பு வாரிய தலைவர் கூறியுள்ளார்.

பைசாபாத்,

அயோத்தியில் ராம ஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி தொடர்புடைய வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது.  இந்த வழக்கு வருகிற 8ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், உத்தர பிரதேச ஷியா வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி, ராம ஜென்ம பூமி தலைமை பூசாரி ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் உடன் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பிற்கு பின் அவர் கூறும்பொழுது, அயோத்தியில் ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாபர் மசூதி கட்ட விரும்பும் அடிப்படைவாத மனநிலை கொண்டவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு செல்லுங்கள்.  இதுபோன்ற முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எந்த இடமும் இல்லை என கூறினார்.

அவர் தொடர்ந்து, மசூதி பெயரில் ஜிகாத்தினை பரப்ப நினைப்பவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பகிர் அல் பாக்தாதியை சந்தித்து அவரது படையில் சேருங்கள் என கூறினார்.

அடிப்படைவாத முஸ்லிம் மதகுருக்கள் இந்தியாவை அழிக்க முயற்சிக்கிறார்கள்.  அவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு இடம்பெயர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ரிஸ்வியின் இந்த கருத்து மதவாதத்தினை தூண்டும் வகையில் உள்ளது என கூறி அவரை கைது செய்யும்படி ஷியா உலெமா கவுன்சில் தலைவர் இப்திகார் உசைன் இன்குலாபி கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம், வக்பு சொத்துகளை பறித்து கொண்டு சட்டவிரோத முறையில் விற்க முயற்சித்த ரிஸ்வி ஒரு குற்றவாளி.  சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.  சட்டத்தில் இருந்து தப்புவதற்காக ஒரு பெரிய நாடகம் நடத்துகிறார்.

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியின்பொழுது, முலாயம் சிங் யாதவ் மற்றும் அப்பொழுது மந்திரியாக இருந்த ஆசம் கான் ஆகியோர் அவருக்கு ஆதரவு அளித்தனர்.  தற்பொழுது, பாரதீய ஜனதா அரசில் குற்றத்தில் இருந்து தப்பிக்க அவர் முயற்சி செய்து வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.