மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி; அண்ணா சமாதியில் தி.மு.க.வினர் அஞ்சலி + "||" + Led by MKStalin Peace march DMK resident in Anna Samadhi

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி; அண்ணா சமாதியில் தி.மு.க.வினர் அஞ்சலி

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி; அண்ணா சமாதியில் தி.மு.க.வினர் அஞ்சலி
அண்ணாவின் 49-வது நினைவு நாள் சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #MKStalin #ArignarAnna
சென்னை, 

மறைந்த  முன்னாள் முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின்  49-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து தி.மு.க.வினர் அமைதிப் பேரணியாக புறப்பட்டு அண்ணா சதுக்கம் சென்றடைந்தனர்.

அங்கு அண்ணா நினைவிடத்தில்  பேராசிரியர் அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, ஜெகத்ரட்சகன், பொன்முடி, ஆ.ராசா, எ.வ.வேலு, வி.பி. துரைசாமி, டி.கே.எஸ். இளங் கோவன், தயாநிதி மாறன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர்