தேசிய செய்திகள்

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு + "||" + Andhra TDP leaders want alliance to snap CM Naidu urges restraint

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். #TDP #BJP
அமராவதி

ஆந்திர முதல் மந்திரி  தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது அவர்  கூறியதாவது:-

மத்திய அரசுடன் பிரச்சினை ஏற்படுத்துவது எங்கள்  நோக்கமல்ல. மாநில நலனே முக்கியம். பா.ஜனதாவுடன் ஆன கூட்ட ணியை மக்கள் விரும்பாத நிலைமை வரும் போது உறவை முறித்து கொள்வது குறித்து முடிவு எடுக்கலாம்.

மக்களின் நாடியை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அதன்  அடிப்படையில்  முன்னுக்கு செல்கிறவர்களால் தான் அரசியலில் வெற்றி பெற முடியும். எனவே இப்போதைக்கு கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டாம்.

இந்த விவகாரத்தில் தீவிரமான ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்க முடியும். பா.ஜனதாவுடன் ஆன உறவு குறித்து ஆலோசிக்க அமைச்சரவை  மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு பிறகே முடிவு எடுக்கப்படும்.

பா.ஜனதாவை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. மாநில நலன்தான் முக்கியம் என கூறினார்

மேலும் பா.ஜனதாவுடன் ஆன கூட்டணியை தொடருவதா அல்லது  முறித்துக் கொள்வதா? என்பது குறித்து விவாதிக்க நாளை அமராவதியில் தெலுங்கு தேச எம்.பி.க்கள் கூட்டம் சந்திரபாபு நாயுடு தலைமையில்  நடைபெறுகிறது.