தேசிய செய்திகள்

2019- லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா காணாமல் போகும் மம்தா பானர்ஜி + "||" + Mamata Banerjee in Howrah In 2019, BJP will be so badly defeated they will be not be found even with a telescope’

2019- லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா காணாமல் போகும் மம்தா பானர்ஜி

2019- லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா காணாமல் போகும் மம்தா பானர்ஜி
2019- லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா காணாமல் போகும். தொலைநோக்கி வைத்து தேடினாலும் சிக்காது என மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #BJP
ஹவுரா

பாரதீய ஜனதாவுக்கு  பிரியாவிடை கொடுப்பதற்கான மணி அடிக்க துவங்கி விட்டதாக இடைத்தேர்தலில் அகட்சி தோல்வி அடைந்தது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

ராஜஸ்தான்,மேற்குவங்க மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா இடைத்தேர்தல்களி்ல் பாரதீய ஜனதா  படு தோல்வியை தழுவியது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணி மாநாட்டில் கலந்த கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி  பேசும் போது கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தாக்கல் செய்த பட்ஜெட் நம்பிக்கையற்ற எதிர்மறையான பட்ஜெட். மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. பாரதீய ஜனதா சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்தி விட்டன. பாரதீய ஜனதாவிற்கு  பிரியாவிடை கொடுப்பதற்கான மணி அடிக்க துவங்கி விட்டது.  2019- லோக்சபா தேர்தலில் அக்கட்சி காணாமல் போகும். தொலைநோக்கி வைத்து தேடினாலும் சிக்காது  என கூறினார்.