மாநில செய்திகள்

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது + "||" + Rs 30 lakh bribe was purchased Coimbatore Bharathiar University Vice Chancellor Arrested

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய  கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது
உதவி பேராசிரியர் பணி வழங்குவதற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழகம் துணை வேந்தரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி கைது செய்தனர். #Tamilnews #Vigilanceraid
கோவை

கோவையில் உள்ள பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.

தொடர்ந்து லஞ்சம் வாங்கிய போது, கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கணபதி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். லஞ்சம் வாங்கியது உறுதியானதால் துணைவேந்தர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யபட்டார்.

ஒரு லட்சம் ரொக்கமாகவும் ரூ 29 லட்சத்தை காசோலையாக பெற்ற போது அவர் சிக்கினார்.