தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்கள் என்றாலே தீவிரவாதிகள் என்பது தேசிய நீரோட்டத்தில் இருந்து அவர்களை விலக செய்யும்: டுவிட்டரில் உமர் + "||" + Labelling Kashmiris as terrorists will drive them further away: Omar

காஷ்மீர் மக்கள் என்றாலே தீவிரவாதிகள் என்பது தேசிய நீரோட்டத்தில் இருந்து அவர்களை விலக செய்யும்: டுவிட்டரில் உமர்

காஷ்மீர் மக்கள் என்றாலே தீவிரவாதிகள் என்பது தேசிய நீரோட்டத்தில் இருந்து அவர்களை விலக செய்யும்:  டுவிட்டரில் உமர்
காஷ்மீர் மக்களை தீவிரவாதிகள் மற்றும் கல்லெறிபவர்கள் என குறிப்பிடுவது அவர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து வெகுதொலைவுக்கு கொண்டு சென்று விடும் என உமர் அப்துல்லா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

போபால் நகரில் இருந்து டெல்லி சென்ற ரெயிலில் பயணம் செய்த காஷ்மீர் மாநில விவசாய பல்கலை கழகத்தினை சேர்ந்த 4 மாணவர்களை பிடித்து விசாரணை செய்த போலீசார் அவர்களில் ஒருவரை கைதும் செய்தனர்.

இந்த நிலையில், காஷ்மீரில் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நமது வேளாண் பல்கலை கழகத்தின் 4 மாணவர்கள் போலீசாரால் பிடிக்கப்பட்டு அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  ரெயில் பயணிகளில் ஒருவர் காஷ்மீர் இளைஞர்களுடன் பயணிக்க விரும்பவில்லை என தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், காஷ்மீர் மக்கள் அனைவரும் தீவிரவாதிகள் மற்றும் கல்லெறிபவர்கள் என்ற தேசியவாதத்தினை ஊக்குவிக்கும் பிரசாரம் ஆனது, தேசிய நீரோட்டத்தில் இருந்து காஷ்மீர் இளைஞர்களை வெகுதொலைவிற்கு அழைத்து சென்று விடும் என கூறியுள்ளார்.

காஷ்மீர் அரசு பட்ஜெட்டில் பாரத் தர்சன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன், இதுபோன்ற சம்பவங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி மாணவர்கள் சிலர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரெயிலில் பெண் ஒருவர் காஷ்மீர் மாணவர்களிடம், பெரிய குழுக்களாக காஷ்மீரிகள் ஏன் பயணம் செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதன்பின் அவர்களின் பையில் இருந்த 5 கிலோ கிராம் எடை கொண்ட சிலிண்டரை கேமிராவில் படம் பிடித்துள்ளார்.  பின்னர், 12க்கும் கூடுதலான காஷ்மீரிகள் டெல்லி செல்லும் போபால் ரெயிலில் வெடிகுண்டு ஒன்றை எடுத்து செல்கின்றனர் என தலைப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

அந்த மாணவர்கள், நாங்கள் போலீசாரால் தெருவில் அழைத்து செல்லப்பட்டு, படம் பிடிக்கப்பட்டோம்.  போலீசார் விசாரணைக்கு பின், எங்களில் ஒரு மாணவரை கைது செய்து, ஹபீப்கஞ்ச் காவல் நிலையத்தில் சிறையில் அடைத்தனர் என டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் காஷ்மீர் முதல் மந்திரி முப்தி, மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கும் டுவிட்டர் செய்தியை அனுப்பி உள்ளனர்.