கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து + "||" + Congratulations to them on winning the Under-19 World Cup: pm modi

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #PMModi #U19CWC
புதுடெல்லி,

நியூசிலாந்தில் நடைபெற்ற 12–வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில்  (19 வயதுக்குட்பட்டோர்) இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளம் அணிக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ சிறப்பாக விளையாடி இளம் வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்றுள்ளனர். இளம் வீரர்களின் வெற்றியை கண்டு நாடே பெருமை கொள்கிறது” என்று  தெரிவித்துள்ளார்.  #PMModi  #U19CWC