மாநில செய்திகள்

ஜெயலலிதா வழியில் மத்திய அரசை எதிர்ப்போம் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் + "||" + On the way to Jayalalithaa Oppose the union government   Deputy Chief Minister O. Panneerselvam

ஜெயலலிதா வழியில் மத்திய அரசை எதிர்ப்போம் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா வழியில் மத்திய அரசை எதிர்ப்போம் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா வழியில் மத்திய அரசை எதிர்ப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #AIADMK #OPS
சென்னை

சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது :-

தமிழக அரசில் பணிபுரியும் போதோ அல்லது பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களோ தங்களது பணிக்காலத்தில் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக மக்களின் உரிமைகளுக்கு பங்கம் ஏற்பட்டால் அதை தட்டிக் கேட்கும் முதல்வராகத் தான் ஆட்சி நடத்தினார்.

ஜெயலலிதா வழியில் நாங்களும் மக்களுக்கு பிரச்னையை உருவாக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு இருந்தால் அதனை திருத்திக் கொள்ள மத்திய அரசுக்கு கூறுவோம். யார் தவறு செய்தாலும் அதனை தட்டிக் கேட்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது.

திட்டங்களின் அடிப்படையில் மற்ற மாநிலங்களுக்கு என்ன பங்கீடு அளிக்கிறார்கள், தமிழகத்திற்கு என்ன மாதிரியான பங்குகள் அளிக்கப்படுகிறதா என்பதை பார்த்து நாங்கள் முழு விவரங்களை மத்திய அரசுக்கு தெரிவிப்போம். எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி தேவையான நிதியைப் பெறுவோம்.

காவிரி டெல்டா பகுதியில் 8 டிஎம்சி வரை தண்ணீர் தந்தால் தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும். கபினியில் போதுமான நீர் இருக்கிறது அதனால் 7 முதல் 10 டிஎம்சி வரையிலான தண்ணீரைத் தர வேண்டும் என்று தான் கேட்டிருந்தோம். தர முடியாது என்று கர்நாடகா மறுத்திருக்கிறது, இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்.

அண்ணாவின் கொள்கைகளை முழுமையாக பின்பற்றி அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதிமுக கொடியில்தான் அண்ணா இருக்கிறார்; கொள்கையில் இல்லை என்ற கி.வீரமணிக்கு கருத்துக்கு  துணை முதலமைச்சர் ஓபிஎஸ்  பதில் அளித்தார்.

கட்சியில் நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக விரைவில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்  என கூறினார்.