தேசிய செய்திகள்

எளிதாக தொழில் தொடங்குவதற்கான பட்டியலில் அசாம் முதலிடம் பிரதமர் மோடி பெருமிதம் + "||" + Assam is ranked first among the North Eastern States in the Ease of Doing Business report PM Modi in Guwahati

எளிதாக தொழில் தொடங்குவதற்கான பட்டியலில் அசாம் முதலிடம் பிரதமர் மோடி பெருமிதம்

எளிதாக தொழில் தொடங்குவதற்கான பட்டியலில் அசாம் முதலிடம் பிரதமர் மோடி பெருமிதம்
வடகிழக்கு மாநிலங்களில் எளிதாக தொழில் தொடங்குவதற்கான பட்டியலில் அசாம் முதலிடத்தில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். #PM Modi
கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது.  இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில்  20 நாடுகளுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தொழில்வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். இந்திய தொழிலதிபர் முக்கேஷ் அம்பானியும் பங்கேற்றார்.

மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறுகுறு தொழில் வளர்ச்சியே அரசுக்கு முக்கியம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழிலுக்கு வருமான வரி 25% குறைக்கப்படுகிறது.  வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் தேசிய மூங்கில் திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் எளிதாக தொழில் துவங்குவதற்கான பட்டியலில் அசாம் முதல் இடத்தில் உள்ளது.  தற்போதுள்ள அரசின் கீழ், மாநிலம் இன்னும் வளர்ச்சி பெறும். 

இவ்வாறு அவர் பேசினார்.