தேசிய செய்திகள்

அசாமில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ,2500 கோடி முதலீடு முகேஷ் அம்பானி + "||" + Reliance to invest Rs 2,500 crore in Assam, create 80,000 jobs: Mukesh Ambani

அசாமில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ,2500 கோடி முதலீடு முகேஷ் அம்பானி

அசாமில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ,2500 கோடி முதலீடு முகேஷ் அம்பானி
அசாமில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.2,500 கோடி முதலீடு செய்துள்ளது என்று ரிலைன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். #MukeshAmbani #Reliance #NarendraModi
கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது.  இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில்  20 நாடுகளுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தொழில்வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். இந்திய தொழிலதிபர் முக்கேஷ் அம்பானியும் பங்கேற்றார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது:

அசாமில் 2,500 கோடி ரூபாயில் புதிய  தொழில்கள் தொடங்கி 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சில்லரை வர்த்தகம், பெட்ரோலிய பொருட்கள் விற்பனை, தொலைத்தொடர்புத்துறை, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த தொழில்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்களுக்குள் சுமார் 80 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அசாமில் உள்ள ரிலையன்ஸ் குழுமங்களுக்கு சொந்தமான சில்லரை வர்த்தக சிறப்பங்காடிகள் உள்ளன.  இந்த புதிய திட்டத்தின் கீழ் சில்லரை வர்த்தக சிறப்பங்காடிகள் 40 ஆக உயர்த்தப்படும். தற்போது 27 ஆக உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகள் 165 ஆக உயர்த்தப்படும். 

அசாமில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 145 புதிய அலுவலகங்கள் திறக்கப்படும்.  நாங்கள் நிலையானா வேலைவாய்ப்புகளை உருவாக்கி சுமார் 1,00,000 பேருக்கு வேலை வழங்க இலக்காக கொண்டுள்ளோம்.

கால்பந்து விளையாட்டில் அசாமில் ஐ.எஸ்.எல். மிகவும் வெற்றிகரமாக பிரபலமாகி உள்ளது எனவே, மாநில அரசுடன் சேர்ந்து உலகளாவிய அளவில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக கால்பந்து அகடாமி ஒன்றை நிறுவ முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.