மாநில செய்திகள்

பிச்சை கொடுக்காததால் வாலிபரை ஓடும் ரெயில் இருந்து தள்ளி கொலை செய்த திருநங்கைகள் + "||" + Lacking begging young guy pushes away from the runway Transgender

பிச்சை கொடுக்காததால் வாலிபரை ஓடும் ரெயில் இருந்து தள்ளி கொலை செய்த திருநங்கைகள்

பிச்சை கொடுக்காததால் வாலிபரை ஓடும் ரெயில் இருந்து தள்ளி கொலை செய்த திருநங்கைகள்
பிச்சை கேட்டு கொடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகளால் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு ஆந்திர வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
சேலம், 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா அருகே தாட்டிவாடி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் மகன்களும் சத்தியநாராயணா (வயது 32), அதே ஊரைச் சேர்ந்தவர் தரம்வீரப்பா (20), இவர்கள் உள்பட 5 பேர் கட்டிட வேலைக்காக சேலம் வழியாக செல்லும் பொக்காரா ஸ்டீல் சிட்டி - ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு வந்து கொண்டிருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 6.15 மணிக்கு வரவேண்டிய அந்த ரெயில் 9.35 மணிக்குதான் வந்தது. அந்த ரெயிலில் 10 திருநங்கைகள் ஏறி பயணிகளிடம் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது  சத்தியநாராயணா, தரம்வீரப்பா ஆகிய 2 பேரும் காசு கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

ஆத்திரமடைந்த திருநங்கைகள் 2 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் சத்தியநாராயணாவை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டனர். அவரைக் காப்பாற்ற தரம்வீரப்பா ரெயிலில் இருந்து குதித்தார். என்றாலும் 2 பேரும் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடினார்கள். 
மற்ற ரெயில் பயணிகள் இதுகுறித்து ரெயில்வே போலீசுக்கும், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்சில் 2 பேரையும் ஏற்றி ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சத்திய நாராயணாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தலையில் பலத்த காயத்துடன் தரம்வீரப்பா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.