தேசிய செய்திகள்

48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் உத்தரபிரதேச போலீசார் அதிரடி நடவடிக்கை + "||" + n UP, 15 encounters in 48 hours as Yogi cracks whip on law and order

48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் உத்தரபிரதேச போலீசார் அதிரடி நடவடிக்கை

48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் உத்தரபிரதேச போலீசார் அதிரடி நடவடிக்கை
உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகளை பிடிக்க 48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் நடத்தி 25 குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். #policeencounters #UP
லக்னோ,

போலீசார் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து அம்மாநில டிஜிபி டிஜிபி சிங் கூறுகையில்,

உத்தரபிரதேசத்தில் போலீசார் நடத்திய 48 மணி நேரத்தில் 18 என்கவுன்டரில் 25 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு குற்றவாளி சுட்டுகொல்லப்பட்டான். சுட்டுகொல்லப்பட்டவன் முசாபர் நகரை சேர்ந்த இந்த்ரபால் என்பதும், இவர் மீது 33 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 50 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கிரிமனல்களை தேடி கண்டுபிடிக்கும் போது என்கவுன்டர் நடக்கும். போலீசார் தற்பாதுகாப்புக்காகவே போலீசார் சுடவேண்டிய  நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.