தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: கல் வீசியது தொடர்பாக 9,730 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற மாநில அரசு ஒப்புதல் + "||" + J-K govt okays withdrawal of stone-pelting cases against 9,730 people

ஜம்மு காஷ்மீர்: கல் வீசியது தொடர்பாக 9,730 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற மாநில அரசு ஒப்புதல்

ஜம்மு காஷ்மீர்: கல் வீசியது தொடர்பாக  9,730 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற மாநில அரசு  ஒப்புதல்
கல்வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய 9,730 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு, 

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி கொல்லப்பட்டதை தொடர்ந்து பயங்கர வன்முறை வெடித்தது. இதில் 85 பேர் கொல்லப்பட்டனர். இதன்தொடர்ச்சியாக அடிக்கடி ராணுவத்தினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பலர் மீது காஷ்மீர் மாநில போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என சில அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தன. இதுதொடர்பாக காஷ்மீர் சட்டமன்றத்தில் முதல்–மந்திரி மெகபூபா முப்தி எழுத்துபூர்வமாக பதில் அளித்து உள்ளார்.அதில் அவர், ‘பல்வேறு அமைப்பினரின் கோரிக்கையையடுத்து கடந்த 2008–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரை நடந்த கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 9,730 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.