தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பசுவதை தடை செய்யக்கோரி தாக்கல் செய்த தனிநபர் மசோதா வாபஸ்: சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு + "||" + BJP MP Subramanian Swamy withdraws bill to ban cow slaughter after Centre intervenes in Rajya Sabha

நாடு முழுவதும் பசுவதை தடை செய்யக்கோரி தாக்கல் செய்த தனிநபர் மசோதா வாபஸ்: சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு

நாடு முழுவதும் பசுவதை தடை  செய்யக்கோரி தாக்கல் செய்த தனிநபர் மசோதா வாபஸ்: சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு
நாடு முழுவதும் பசுவதை தடை செய்யக்கோரி தாக்கல் செய்த தனிநபர் மசோதாவை வாபஸ் பெறுவதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். #SubramanianSwamy
புதுடெல்லி, 

பசு வதையை தடை செய்யக்கோரும் தனிநபர் மசோதாவை பாராளுமன்ற மாநிலங்களவையில் பா.ஜனதா உறுப்பினர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்திருந்தார். அந்த மசோதா மீது  காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது, மத்திய வேளாண்துறை மந்திரி ராதா மோகன்சிங் குறுக்கிட்டு, ‘‘பசு பாதுகாப்புக்காக கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எங்கள் பயணம் அதை நோக்கித்தான் இருக்கிறது. ஆகவே, இந்த மசோதாவை வாபஸ்பெற வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு சுப்பிரமணிய சாமி, ‘‘அரசுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கும்வகையில், இந்த மசோதாவை வாபஸ் பெறுகிறேன். பசுவதை தடைக்கு சட்டம் கொண்டு வருவதுடன், பால் கறக்க இயலாத பசுக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.